குள்ளமாக இருப்பதில் வருத்தமில்லை - நித்யா மேனன் பேட்டி
குள்ளமாக இருப்பதில் வருத்தமில்லை - நித்யா மேனன் பேட்டி
தமிழ், தெங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் நடித்துவரும் நித்யா மேனனின் லட்சியம் இயக்குனராவது. அதற்காக கதைகள் எழுதி வருகிறவர், தான் இயக்குனராவதற்கான காரணத்தை நிருபர்களை அழைத்து தெரிவித்தார்.
திடீரென்று இயக்குனர் ஆசை ஏற்பட என்ன காரணம்?
எனக்கு கதைகள் எழுதுவதில் ஆர்வம் உண்டு. ஓய்வு நேரங்களில் நல்ல நல்ல கதைகளை எழுதி வருகிறேன். இந்த கதைகளை வைத்து விரைவில் படங்கள் இயக்க திட்டமிட்டுள்ளேன்.
விரைவில் என்றால் எப்போது...?
இப்போது நிறைய படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறேன். எனக்கு மார்க்கெட் இருப்பதுவரை நடிப்பேன். படங்கள் குறைந்ததும் டைரக்டர் ஆகி விடுவேன்.
இயக்குனர் வேலையை கற்றுக் கொண்டுவிட்டீர்களா?
படப்பிடிப்புகளில் காட்சிகளை எப்படி எடுக்க வேண்டும் என்று கற்றுக்கொண்டு விட்டேன். டைரக்டர்கள் என்னிடம் கேட்டால் அவர்கள் எடுக்கும் படத்தில் திருத்தங்கள் சொல்கிறேன். அந்த அளவுக்கு எனக்கு கதை அறிவு உள்ளது.
இயக்கத்தை தேர்வு செய்ய என்ன காரணம்?
நல்ல படங்கள் அதிகம் வரவேண்டும். அதற்காகத்தான் நான் டைரக்டராகப் போகிறேன்.
இப்போது என்னென்ன படங்களில் நடித்து வருகிறீர்கள்?
சூர்யாவுடன் நடித்த 24 படம் விரைவில் வெளிவர உள்ளது. விக்ரமுடன் இரு முகன் படத்தில் நடிக்கிறேன். தெலுங்கில் ஜுனியர் என்டிஆருடன் ஒரு படம். தவிர மலையாளப் படங்களும் உள்ளன.
உயரமான நடிகர்களுடன் இணைந்து நடிப்பது சிரமமாக இல்லையா?
இல்லை. நான் குள்ளமாக இருப்பதாக பலர் பேசுகின்றனர். இதனால் எனக்கு வருத்தம் இல்லை. என்னுடன் துல்கர் சல்மான், நிதின், சந்தீப் மேனன் உள்பட பலர் நடித்து இருக்கிறார்கள். எல்லோருமே உயரமானவர்கள். சில காட்சிகளை ஸ்டூலில் என்னை நிற்க வைத்துதான் படமாக்குகின்றனர். நான் குள்ளமாக இருப்பதால் உயரமாக இருப்பவர்கள் என்மீது அக்கறை காட்டுகின்றனர். எனக்கு ஆசி வழங்கி வாழ்த்தவும் செய்கிறார்கள். இது எனக்கு மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது.