Daily Horoscope
✕

இதுக்கு தான் நான் வெளியில் வருவதில்லை - அஜித் ஸ்டைலில் பதில் அளித்த அனிகா!

Written By Papiksha Joseph
Updated: புதன், 10 மார்ச் 2021 (14:33 IST)
தல அஜித் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற 'என்னை அறிந்தால்" படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்து தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் அனிகா. மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தாலும் தமிழ் சினிமா ரசிகர்கள் தான் அனிகாவுக்கு ஒரு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தனர்.
 
இதைடுத்து மீண்டும் அஜித்தின் மகளாக விஸ்வாசம் படத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றார். பார்த்த சீக்கிரத்தில் கிடு கிடுவென வளர்ந்து பெரிய மனுஷியாகிவிட்டார் அனிகா. இதற்கிடையில் அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி நம்ம அனிகாவா இது என வியக்கும் அளவிற்கு கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்ககளை சமூகவலைத்தளங்கில் வெளியிட்டிருந்தார். 
 
இந்நிலையில் தற்போது அனிகாவை நேரில் பார்த்து பரவசப்பட்ட ரசிகர் ஒருவர், நீங்க விஸ்வாசம் படத்தில் சூப்பரா நடிச்சிருந்தீங்க என்றார். அதோடு நிறுத்தாமல், நீங்க ரொம்ப குள்ளமா இருக்கீங்க, கொஞ்சம் உயரமா ஆக வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதை கேட்டு கடுப்பான அனிகா, இதனால் தான் நான் பொது இடங்களுக்கு செல்ல விரும்புவதில்லை என அஜித் ஸ்டைலில் கூறிவிட்டு நகர்ந்துள்ளார். ரீல் பொண்ணா இருந்தாலும் அஜித் பொண்ணாச்சே... 
 

எல்லாம் காட்டு

பிரேமலு ஹீரோவை வச்சி படமெடுக்கும் சூர்யா.. விரைவில் அறிவிப்பு...

சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்த வெப்தொடர் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எந்த ஓடிடியில்?

ரஜினி படம்.. அஜித் படம்... நம்ம படத்த என்ன பண்றது?.. குழப்பத்தில் தனுஷ்!...

விஜய் - அஜித்தின் சாதனையை முறியடித்த சூர்யா - ஜோதிகா

அப்பாவுக்கு நிறைய வேலை இருக்கு!. அவரை யூஸ் பண்ணமாட்டேன்!.. ஜேசன் சஞ்சய் பேட்டி!...

அடுத்த கட்டுரையில்