திங்கள், 25 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. கிருஷ்ண ஜெயந்தி
Written By

விஷ்ணு கிருஷ்ணாவதாரம் எடுத்த தினமே கிருஷ்ண ஜெயந்தி!!

சந்தான கோபால கிருஷ்ணன்: யசோதையின் மடியிலே அமர்ந்த கோலம். 

பாலகிருஷ்ணன்: தவழும் கோலம். ஆலயங்களில் கிருஷ்ணன் சன்னதிகளிலும் பலரது வீட்டில் பூஜை அறையிலும் இப்படத்தையே காணலாம்.
 
காளிய கிருஷ்ணன் : காளிங்கன் என்ற நாகத்தின் மீது நர்த்தனம் புரியும் காளிய கிருஷ்ணன்.
 
கோவர்த்தனதாரி: கிருஷ்ணன் தன் சுண்டு விரலால் கோவர்த்தன கிரியைத் தூக்கும் கோலம்.
 
ராதாகிருஷ்ணன்: வேணுகோபாலன்; வலது காலை சிறிது மடித்து இடது காலின் முன்பு வைத்து பக்கத்தில் ராதை நின்றிருக்க குழலூதும் கண்ணன்.
 
முரளிதரன்: கிருஷ்ணன் ருக்மணி மற்றும் சத்யபாமா சமேதராய் நின்றிருக்கும் திருக்கோலம். இது தென் இந்தியாவில் மிகவும் புகழ் பெற்றது.
 
மதனகோபாலன்: அஷ்ட புஜங்களை உடைய குழலூதும் கிருஷ்ணன்.
 
பார்த்தசாரதி: அர்ஜூனனுக்கு கிருஷ்ணன் சீதை உபதேசிக்கும் திருக்கோலம். கிருஷ்ண அவதாரம் இந்துக்களுக்கு மிக மிக்கியமானதாகும். ஏனெனில் போர்க்களத்தில் அர்ஜூனனுக்கு கிருஷ்ணர் கொடுக்கும் உபதேசங்களே இந்துக்களின் புனித நூலான பகவத் கீதையானது.
 
கண்ணனை வீட்டிற்கு வரவழைக்க:
 
பாகவதத்தில் கண்ணனின் பிறப்பை விவரிக்கும் தசம ஸ்கந்தம் எனப்படும் பத்தாவது அத்தியாயத்தை ஒருவர் படிக்க, குடும்பத்தில் மற்றவர்கல் கேட்க வேண்டும். இதனால் பகவான் கிருஷ்ணரின் ஆசீர்வாதம் நமது இல்லத்திற்கும், உள்ளத்திற்கும் கிடைக்கும். கிராமங்களில் மாலை வேலையில்தான் கிருஷ்ண  ஜெயந்தி பூஜை செய்வார்கள்.
 
வீட்டின் பூஜையும் நைவெத்தியமும் செய்து முடித்தபிறகு அருகே உள்ள கண்ணன் ஆலயத்திற்குச் சென்று இறைவனை வணங்கி அங்கு நடத்தும் உறியடி, வழுக்கு மரம் ஏறுதல் ஆகியவற்றைக் கொண்டு மகிழ்வது சிறப்பு.
 
கிருஷ்ண ஜெயந்தியன்று பிள்ளை பேறு இல்லாதவர்கள் ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள தசம ஸ்காந்தம் படித்து பாராயணம் செய்தால் கண்ணனை போல அழகான ஆண் குழந்தை பிறக்கும் என்னும் நம்பிக்கை உள்ளது.