வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 20 ஜூலை 2019 (11:07 IST)

ஜிம்பாப்வேக்கு தடை விதித்தது ஐசிசி – வீரர்கள் புலம்பல் !

ஜிம்பாப்வே அணியின் நடவடிக்கைகளில் அந்நாட்டு அரசின் தலையீடு அதிகமாக இருப்பதாகக் கூறி அந்நாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஐசிசி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி 2000 ஆம் ஆண்டுக்குப் பிறகு தனது பொலிவை இழந்தது. கடந்த சில பத்தாண்டுகளாகவே உப்புக்கு சப்பாணி அணியாகவே இருந்து வந்த ஜிம்பாப்வே அணி இந்தாண்டு உலகக்கோப்பைக்கு  தகுதிப்பெறவில்லை.

இந்நிலையில் அந்நாட்டு அணியில் ஜிம்பாப்வே அரசின் தலையீடு அளவுக்கு அதிகமாக இருப்பதால் அந்நாட்டு கிரிக்கெட் அணிக்கு ஐசிசி காலம் குறிப்பிடாமல் தடை விதித்துள்ளது. இதனால் அந்நாட்டு வீரர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

இதுகுறித்து அந்த அணியின் சிக்கந்தர் ரஸா ‘ நாங்கள் தடை செய்யப்பட்டுள்ளோம் என்று தெரிகிறது, ஆனால் எத்தனை காலம் இது நீடிக்கும்?. இதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இனி நாங்கள் எங்கு செல்வது ?. கிரிக்கெட் பேக்கை எரித்து விட்டு வேறு வேலை தேட வேண்டியதுதானா? ‘ எனக் கூறியுள்ளார்.