1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 30 டிசம்பர் 2022 (08:05 IST)

கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார்: கோடிக்கணக்கான ரசிகர்கள் இரங்கல்!

pele
உலகப் புகழ்பெற்ற கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார் என்ற செய்தி அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
பிரேசில் அணிக்காக 16 வயதுமுதல் விளையாடிய பீலே, அந்த அணிக்காக மூன்று முறை உலகக் கோப்பையை பெற்றுத்தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 1958 ஆம் ஆண்டு முதல் முறையாக உலகக் கோப்பைக்காக விளையாடியபோது அரையிறுதியில் ஹாட்ரிக் கோல் அடித்தார் என்பதும் அதன் பின்னர்தான் அவர் உலகப் புகழ் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பீலே உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்று முன் அவர் காலமாகி விட்டதாக அவரது மகள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதனை அடுத்து உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Siva