செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By vinoth

காயத்தால் பயிற்சி ஆட்டத்தில் விளையாடாத மெஸ்ஸி… இறுதிப் போட்டி களமிறங்குவாரா?

2022 ஆம் ஆண்டு கால்பந்து உலகக்கோப்பை போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

நாளை நடக்க உள்ள இறுதிப் போட்டியில் அர்ஜெண்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்நிலையில் நேற்று அர்ஜெண்டினா அணி விளையாடிய பயிற்சி போட்டியில் அந்த அணியின் கேப்டன் மெஸ்ஸி கலந்துகொள்ளவில்லை.

குரேஷியா அணிக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் அவருக்கு தொடையில் காயம் ஏற்பட்டதால் போட்டி முடிந்ததும் நடக்க முடியாமல் அவதிப்பட்டார். அதனால் நாளை நடக்கும் இறுதிப் போட்டியில் மெஸ்ஸி பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் மெஸ்ஸியின் காயம் பற்றி அணி நிர்வாகம் எதுவும் அதிகாரப்பூர்வமாக இதுவரை அறிவிக்கவில்லை.