புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 9 மார்ச் 2022 (09:45 IST)

ஆர் சி பி அணியின் புதிய கேப்டன் யார்? மூன்று வீரர்களின் பெயர் பரிசீலனை!

ஐபிஎல் தொடரில் கவனம் பெற்ற அணிகளில் ஒன்றான ஆர்சி பி-யின் கேப்டன் பொறுப்பை விராட் கோலி சமீபத்தில் ராஜினாமா செய்தார்.

2021 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கோலிக்கு மிக மோசமான ஆண்டாக அமைந்தது. ஐபிஎல் உள்ளிட்ட சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகினார். முதலில் ஆர் சி பி அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்துதான் அவர் விலகினார்.

ஆனால் இப்போது அவர் சர்வதேச போட்டிகளின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியதால் அவருக்கான பணிச்சுமை குறைந்துள்ளது. இதனால் அவர் மீண்டும் ஆர் சி பி அணிக்கு தலைமையேற்க வேண்டும் என்ற ஆசை ரசிகர்களிடம் எழுந்துள்ளது. ஆனால் அதில் கோலி விருப்பம் காட்டுவது போல தெரியவில்லை.

இந்நிலையில் விரைவில் ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் இன்னமும் ஆர் சி பி அணிக்குக் கேப்டன் அறிவிக்கப்படவில்லை. ஆனால் மூன்று வீரர்களின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளதாக தெரிகிறது. க்ளன் மேக்ஸ்வெல், பாஃப் டு பிளஸ்சி மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய மூவரில் ஒருவர் கேப்டனாக பொறுப்பேற்று செயல்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.