காமன்வெல்த்: இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை பெற்றுத்தந்த வீரர்
காமன்வெல்த் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நேற்று தொடங்கிய நிலையில் இந்தியா தனது பதக்க பட்டியலை தொடங்கியுள்ளது.
சற்றுமுன் நடைபெற்ற ஆண்களுக்கான 56 கிலோ எடைப்பிரிவு பளு தூக்கும் போட்டியில் இந்தியாவின் குருராஜா வெள்ளி பதக்கம் வென்றார். இதன் மூலம் இந்தியா தனது பதக்க வேட்டையை தொடங்கியுள்ளது.
இவர் கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த காமன்வெல்த போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.