செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 20 ஏப்ரல் 2023 (16:41 IST)

விராத் கோஹ்லி - டூபிளஸ்சிஸ் அரைசதங்கள்: பெங்களூரு அணி அபார பேட்டிங்..!

ஐபிஎல் தொடர் கிரிக்கெட் போட்டியின் இன்று 28 வது போட்டி பெங்களூர் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது 
 
இந்த போட்டியில் பஞ்சாப் அணி டாஸ் வென்றதை அடுத்து பந்துவீச்சை தேர்வு செய்ய பெங்களூர் அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது 
 
பெங்களூர் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான விராத் கோலி மற்றும் டுபிளஸ்சிஸ் ஆகிய இருவருமே அபாரமாக அரை சதம் அடித்துள்ளனர் என்பதும் பெங்களூர் அணி 15 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 132 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 விராத் கோலி 43 பந்துகளில் 57 ரன்களும்,  டூபிளஸ்சிஸ் 49 பந்துகளில் 68 ரன்களும், எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் பெங்களூர் அணிக்கு விராட் கோலி தலைமை தாங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 
Edited by Mahendran