டி.என்.பி.எல்: திருச்சி அணியை சுருட்டி எடுத்த காரைக்குடி
தமிழ்நாடு பிரிமியர் கிரிக்கெட் போட்டிகள் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நேற்றைய ஆட்டத்தில் காரைக்குடி காளை அணியினர் திருச்சி அணியை சுருட்டி எடுத்து அடக்கியனர்
முதலில் பேட்டிங் செய்த திருச்சி வாரியர்ஸ் அணியினர் 20 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மட்டும் இழந்து 190 ரன்கள் குவித்தது. இந்த அணியின் பரத்சங்கர் அபாரமாக விளையாடி 112 ரன்கள் குவித்தார்,
191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய காரைக்குடி காளை அணி ஆரம்பம் முதலே அடித்து ஆடி 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 193 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அனிருதா அபாரமாக விளையாடி 60 ரன்கள் எடுத்தார்.
இந்த வெற்றியின் மூலம் காரைக்குடி அணியினர் 8 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்தனர். திருச்சி வாரியர்ஸ் அணி இதுவரை ஒரே வெற்றியை மட்டும் பெற்று 2 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது.