2011 ஆம் ஆண்டு உலக கோப்பையில் மேட்ச் பிக்சிங்; கிளம்பும் பரபரப்பு தகவல்!!
கடந்த 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்தியா- இலங்கை அணிகள் மோதின.
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் எடுத்தது. கவுதம் கம்பீர், கோலி, தோனி, யுவராஜ் சிங் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா வெற்றி பெற்றது.
இந்நிலையில், பைனலில் இலங்கை தோற்ற விவகாரத்தில் மர்மம் இருப்பதாக இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா கூறியுள்ளார்.
இது புதிய சர்ச்சையை கிளப்பி உள்ள நிலையில் இது குறித்து எழுத்துபூர்வமாக புகார் அளித்தால் விசாரணைக்கு உத்தரவிடப்படும் என இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் ஜெயசேகரா தெரிவித்துள்ளார்.