செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 20 ஜனவரி 2023 (11:18 IST)

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: சானியா மிர்சா- அன்னா டேனிலினா ஜோடி வெற்றி!

Sania
கடந்த சில நாட்களாக ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் மெல்போன் நகரில் நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா மற்றும் கஜகஸ்தா நாட்டின் அன்னா டேனிலியா ஜோடி அபார வெற்றி பெற்றுள்ளது
 
இந்த ஜோடியை 6 - 2,  7-5 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்றதை அடுத்து சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்த மாதம் சர்வதேச டென்னிஸ் போட்டியிலிருந்து 36 வயதான சானியா மிர்சா விலக உள்ள நிலையில் அவர் விளையாடும் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டி இதுதான் என்பதால் இந்த போட்டியில் அவர் வெற்றி பெற்று கோப்பையை பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran