வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 17 மார்ச் 2020 (08:21 IST)

அந்த சாதனையை இவர் ஒருவரால்தான் நிகழ்த்த முடியும் – ரோஹித் ஷர்மாவைக் கைகாட்டிய முன்னாள் வீரர் !

டி 20 போட்டிகளில் இரட்டைசதம் எனும் சாதனை இந்திய வீரர் ரோஹித் ஷர்மாவால் மட்டுமே முடியும் என ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளிலேயே இரட்டை சதம் எட்டாக்கனியாக இருந்தது ஒரு காலம். ஆனால் இப்போது டி 20 போட்டிகளில் யார் முதலில் இரட்டைசதம் அடிக்கப் போகிறார்கள் எனக் கேள்வி எழுந்துள்ள காலம். ஒருநாள் போட்டிகளில் கடந்த 2010 ஆம் ஆண்டு சச்சின் தொடங்கி வைத்த இரட்டைசத சாதனை அதன் பின்னர் 10 முறை நிகழ்த்தப்பட்டு விட்டது. அதில் மூன்று முறை இந்திய வீரர் ரோஹித் ஷர்மா இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.

அதேபோல டி 20 போட்டியிலும் அவர்தான் முதலில் இரட்டைசதம் அடிப்பார் என பல முன்னாள் இன்னாள் வீரர்கள் கூறியுள்ளனர். அதன் படி ஆஸ்திரேலியாவின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக் ரோஹித் ஷர்மாவுக்குதான் அந்த வாய்ப்பு அதிகமாக உள்ளதாக சொல்லியுள்ளார்.

இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியா ஆரோன் பின்ச் 172 ரன்கள் அடித்ததே அதிகபட்சமாக உள்ளது.