புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 11 அக்டோபர் 2017 (15:38 IST)

ரோகித், கோலி விக்கெட்டை இழந்ததுதான் இந்தியா தோல்விக்கு காரணம்

முதல் ஓவரிலே ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் விக்கெட்டை இழந்ததுதான் நெருக்கடிக்கு காரணம் என வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் தெரிவித்துள்ளார்.


 

 
இந்திய - ஆஸ்திரேலியா அணிகள் இடையே நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. கேப்டன் ஸ்மித் காயம் காரணமாக டி20 போட்டி தொடரில் இருந்து விலகினார். இதையடுத்து டேவிட் வார்னர் கேப்டனாக நியமிக்கப்பட்டார். 
 
முதல் டி20 போட்டியில் இந்திய அணி டக்வொர்த் லெவிஸ் முறையில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. இந்நிலையில் இந்திய அணியின் தோல்வி குறித்து வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் கூறியதாவது:-
 
முதல் ஓவரிலே ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தங்கள் விக்கெட்டுகளை இழந்ததுதான் எங்களுக்கு மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தியது. ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பெகண்டிராப் மிக நல்ல முறையில் பந்து வீசினார். 
 
இந்த தோல்விக்கு தனிப்பட்ட ஒருவர் மட்டுமே காரணம் என யாரை நோக்கியும் குற்றம் சாட்ட முடியாது. எங்களுக்கு சோகமான நாளாக மாறிவிட்டது என்றார்.