திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 14 ஜூலை 2023 (07:46 IST)

ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா சதம்.. வலுவான நிலையில் இந்தியா..!

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூலை 12ஆம் தேதி தொடங்கிய நிலையில் முதல் நாளில் பேட்டிங் செய்த மே.இ.தீவுகள் அணி 150 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. அஸ்வின் மிக அபாரமாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 
 
இந்த நிலையில் தற்போது முதல் இன்னிங்ஸ் இந்தியா விளையாடி வரும் நிலையில் ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவருமே சதம் அடித்துள்ளனர். குறிப்பாக டெஸ்ட் போட்டியில் முதல் முதலாக விளையாடும் ஜெய்ஸ்வால் 143 ரன்கள் அடித்து இன்னும் ஆட்டமிழகாமல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
தற்போது இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 162 ரன்கள் மே.இ. தீவுகள் அணியின் ஸ்கோரை விட அதிகமாக எடுத்து வலுவான நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva