ரோஜர் பெடரருடன் செல்பி எடுக்க அத்துமீறிய ரசிகர் - வீடியோ இணைப்பு
நேற்று நடந்த பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில், ரசிகர் ஒருவர் ரோஜர் பெடரருடன் செல்பி எடுக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்றைய பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ரோஜர் பெடரர் - பல்லா இருவரும் நேருக்கு நேர் மோதினர். இதில் போட்டி முடிந்த பிறகு ரசிகர் ஒருவர் ரோஜர் பெடரருடன் செல்பி எடுக்க முயன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டார். மேலும் டென்னிஸ் கோர்ட்டில் இருக்கும் பாதுகாப்புகளை எல்லாம் தாண்டி அத்துமீறி நுழைந்ததால் பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது. நடந்த இச்சம்பவத்தால் ரோஜர் பெடரர் சம கடுப்பாகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.