புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 14 அக்டோபர் 2021 (11:38 IST)

உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகளில்லை… ரிஷ்ப் பண்ட் ஆதங்கம்!

டெல்லி அணி லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடி முதல் இடத்தில் வந்து ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

நேற்று நடந்த இரண்டாவது எலிமினேட்டர் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 135 ரன்கள் மட்டுமே எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி அணியின் தவான் 36 ரன்களும், ஸ்ரேயாஸ் அய்யர் 30 ரன்களும் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் கே கே ஆர் அணி கடைசி கட்ட பரபரப்பில் 20 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது.

போட்டிக்குப் பின்னர் பேசிய டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மிகவும் உணர்ச்சி பூர்வமாக ‘என்னிடம் உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. போட்டியை நேர்மறையாக முடிக்க முடியும் என நம்பினோம். பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினர். பேட்டிங்கில்தான் எங்களால் ரன்களை சேர்க்க முடியும். நாங்கள் அடுத்த சீசனில் சிறப்பாக விளையாடி மீள்வோம்.’ எனக் கூறியுள்ளார்.