1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2021
Written By Mahendran
Last Modified: புதன், 13 அக்டோபர் 2021 (21:47 IST)

136 ரன்கள் இலக்கு கொடுத்த டெல்லி: ஃபைனலுக்கு செல்லுமா கொல்கத்தா?

இன்று நடைபெற்று வரும் பிளே ஆப் போட்டியின் 2-வது போட்டியில் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் மோதி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 135 ரன்கள் மட்டுமே எடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி அணியின் தவான் 36 ரன்களும், ஸ்ரேயாஸ் அய்யர் 30 ரன்களும் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் 136 என்ற எளிய இலக்கை நோக்கி தற்போது கொல்கத்தா அணி விளையாடி வருகிறது. அந்த அணியின் கில் மற்றும் வெங்கடேஷ் அய்யர் தற்போது தொடக்க ஆட்டக்காரராக விளையாடி வருகின்றனர் என்பதும், அவர்கள் இரண்டு ஓவரில் 16 ரன்கள் எடுத்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்றைய போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது