உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி: இந்திய வீராங்கனை பி.வி.சிந்து விலகல்!
உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் இருந்து விலகுவதாக இந்தியாவின் பிவி சிந்து அறிவித்திருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
சமீபத்தில் நடந்த காமன்வெல்த் போட்டிகள் பேட்மிண்டன் போட்டியில் இந்தியாவுக்காக தங்கப்பதக்கம் வாங்கிக் கொடுத்தவர் பி வி சிந்து என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் அடுத்ததாக அவர் உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் உலக சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் இருந்து விலகுவதாக இந்திய வீராங்கனை பிவி சிந்து அறிவித்துள்ளார்
காமன்வெல்த் போட்டியின் போது ஏற்பட்ட காயத்தால் ஓய்வு எடுக்க வேண்டியது அவசியம் என மருத்துவர்கள் கூறியதால் மருத்துவரின் பரிந்துரையின் பேரில் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து விலகுவதாக பிவி சிந்து அறிவித்துள்ளார்