70 ஆண்டுகால சாதனையை முறியடித்த புஜாரா!!
ராஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள புஜாரா 70 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார்.
இந்தியாவில் ஆண்டுதோறும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ராஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. தற்போது இதன் நான்காவது சுற்று போட்டிகள் நடக்கிறது.
இதில் சவுராஸ்டிரா அணி, ஜார்கண்ட் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் சவுராஸ்டிரா அணிக்காக களமிரங்கிய புஜாரா 204 ரன்களை குவித்தார்.
இரட்டை சதம் அடித்த புஜாரா, முதல் தர போட்டிகளில் தனது 12 வது இரட்டை சதத்தை பதிவு செய்தார். இதன் மூலம் முதல் தர போட்டியில் அதிக இரட்டை சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார்.
இந்த சாதனையை சுமார் 70 ஆண்டுகளாக எந்த இந்திய வீரர்களும் எட்டியதில்லை. இந்நிலையில் புஜாரா இதை முறியடித்துள்ளார்.