புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 26 செப்டம்பர் 2017 (14:00 IST)

வரும் 28ஆம் தேதி முதல் புதிய விதிமுறைகள்; அச்சத்தில் கிரிக்கெட் வீரர்கள்

வரும் 28ஆம் தேதி முதல் கிரிக்கெட் போட்டியில் புதிய விதிமுறைகளை அமல்படுத்த உள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.


 

 
கிரிக்கெட் போட்டிகளில் தொழில்நுட்பம் ரீதியாக புதிதுபுதிதான விதிமுறைகளை ஐசிசி அமல்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் மைதானத்தில் வீரர்களின் செயல்பாடுகளுக்கு கடிவாளம் போடும் வகையில் புதிய விதிமுறகளை வரும் 28ஆம் தேதி முதல் அமல்படுத்த உள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது.
 
ஐசிசியின் புதிய விதிப்படி வீரர்கள் ஒழுங்கீனமாக செயல்பட்டால் நடுவர்களால் வெளியேற்றப்படுவார்கள். கால்பந்து போட்டியில் வீரர்கள் ரெட் கார்டு மூலம் வெளியேற்றப்படுவது குறிப்பிடத்தக்கது. அதே விதிமுறைதான் ஆனால் ரெட் கார்டுக்கு பதில் 2 சிக்னல்கள் நடுவர்களிடம் இருந்து வரும்.
 
அதேபோன்று இனி டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் முதல் 80 ஓவரில் 1 முறை மட்டுமே டிஆர்எஸ் முறை பயன்படுத்த முடியும். இதற்கு முன் இரண்டு முறை பயன்படுத்தும் வாய்ப்பு இருந்தது.
 
வீரர்களின் பேட்டின் விளிம்புகள் 40mm அளவிற்கு மேல் இருக்கக்கூடாது. மேலும் இந்த விதிமுறை வரும் 28ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தாலும் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ஆஸ்திரேலியா, இந்தியா இடையிலான தொடரில் இந்த விதிமுறைகள் இருக்காது.
 
இந்தியா, ஆஸ்திரேலியா இடையில் நடைபெறும் போட்டிகளே பழைய விதிமுறைகளுடன் நடைபெறும் கடைசி போட்டிகளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.