செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 4 ஜூன் 2023 (15:58 IST)

2வது ஒருநாள் போட்டியில் பதிரானாவை பெஞ்சில் உட்கார வைத்த இலங்கை.. என்ன காரணம்?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பதிராவை ஒவ்வொரு போட்டியிலும் கேப்டன் தோனி பயன்படுத்திய நிலையில் முதல் ஒருநாள் போட்டியில் பதிரானாவை விளையாட வைத்த இலங்கை அணி இரண்டாவது ஒருநாள் போட்டியில் பெஞ்சில் உட்கார வைத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 நேற்று முன் தினம் நடந்த இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் பதிரானா விளையாடினார். ஆனால் அந்த போட்டியில் அவரும் ஒன்பது ஓவர்கள் வீசி 66 ரன்களை விட்டுக் கொடுத்தார். 
 
இதனை அடுத்து இன்று நடைபெறும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் பதிரானாவை அணி நிர்வாகம் பெஞ்சில் உட்கார வைத்து விட்டது. இதனால் அந்த போட்டியில் அவர் விளையாடவில்லை. 
 
இந்த நிலையில் இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து 323 ரன்கள் எடுத்துள்ள நிலையில் 324 என்ற இலக்கை நோக்கி தற்போது ஆப்கானிஸ்தான் அணி விளையாடுகிறது.
 
Edited by Siva