செவ்வாய், 6 டிசம்பர் 2022
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated: வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (20:14 IST)

ஆசிய கோப்பையில் இந்தியாவை வீழ்த்துவோம்; முன்னாள் பாகிஸ்தான் வீரர் ரசித் லதீப்

India Pakistan
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை வீழ்த்துவோம் என முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது என்பதும் இந்த போட்டியின் இறுதிப்போட்டி செப்டம்பர் 11 ஆம் தேதி நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதில் இந்தியா பாகிஸ்தான் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளதை அடுத்து ஆகஸ்ட் 28ஆம் தேதி துபாயில் இந்திய பாகிஸ்தான் போட்டி நடைபெற உள்ளது
 
இந்த நிலையில் கடைசி உலகக் கோப்பையில் இந்தியாவை பாகிஸ்தான் தோற்கடித்தது போல் இந்த முறையும் சரியான முறையில் திட்டமிட்டு இந்தியாவை ஆசிய கோப்பையில் தோற்கடிப்போம் என முன்னாள் பாகிஸ்தான் வீரர் லதீப் தெரிவித்துள்ளார் 
 
இந்திய அணியில் தரமான வீரர்கள் உள்ளனர் என்பதில் சந்தேகம் இல்லை என்றாலும் அந்த அணியை எங்களால் தோற்கடிக்க முடியும் என்றும்   அவர் தெரிவித்துள்ளார்