உலக கோப்பையில் விளையாட அனுமதியா? பாகிஸ்தான் வெளியுறவுத்துறையின் முக்கிய அறிவிப்பு..!
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற இருக்கும் நிலையில் இந்த போட்டியில் பாகிஸ்தான் கலந்து கொள்ளுமா என்ற சந்தேகம் ஏற்பட்ட நிலையில் இது குறித்த முக்கிய அறிவிப்பை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி என்ற கிரிக்கெட் திருவிழா அக்டோபர் மாதம் இந்தியாவில் தொடங்க உள்ளது. இந்த போட்டிக்கு அனைத்து அணிகளும் தயாராகி வரும் நிலையில் இந்தியாவில் நடைபெறும் சில போட்டிகளில் கலந்து கொள்வது குறித்து பாகிஸ்தான் தயங்கி வருவதாக கூறப்பட்டது
குறிப்பாக அகமதாபாத் மைதானத்தில் பாகிஸ்தானில் விளையாடாது என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட இந்தியாவுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை அனுப்புவதற்கு அந்நாட்டு வெளிப்புறத்துறை அமைச்சகம் சம்மதம் தெரிவித்துள்ளது.
பல்வேறு ஆலோசனைக்கு பின்னர் பாகிஸ்தான் அணியை இந்தியாவுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Edited by Siva