திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 20 அக்டோபர் 2020 (16:51 IST)

பயிற்சியாளர் மற்றும் குடும்பத்தினருடன் பிரச்சனையா? லண்டனில் இருந்து பி வி சிந்து பதில்!

பேட்மிண்ட்டன் வீராங்கனையான பி வி சிந்து குடும்பத்தினர் மற்றும் பயிற்சியாளருடன் எனக்கு எந்தவித கருத்து வேறுபாடும் இல்லை எனக் கூறியுள்ளார்.

2016 ஆம் ஆண்டு நடந்த பேட்மிண்ட்டன் போட்டியில் வெள்ளி வென்று அசத்தியவர் இந்தியாவைச் சேர்ந்த பி  வி சிந்து. அதன் பின்னர் கடந்த ஆண்டு உலக சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்றார். இந்தியாவில் பேட்மிண்ட்டன் விளையாட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளார். இந்நிலையில் பயிற்சியாளர் மற்றும் குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக பி.வி. சிந்து லண்டன் சென்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.

ஆனால் இதை அவர் மறுத்துள்ளார். ஊட்டச்சத்து ஆலோசனைகள் மற்றும் உடற்பயிற்சி ஆலோசனைகளை பெறுவதற்காகவே லண்டன் வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தினமும் பெற்றோரிடம் தொலைபேசி மூலம் பேசி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். அதே போல பயிற்சியாளர் கோபிசந்துடனும் தனக்கு எந்த பிரச்சனையும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.