பெயரை மாற்றிய பஞ்சாப் அணி.. நெட்டிசன்ஸ் கிண்டல்!
ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் அணிகளில் ஒன்றான பஞ்சாப் அணி தங்கள் பெயரை மாற்றியுள்ளது.
ஐபிஎல் தொடரில் இதுவரைக் கோப்பையே வெல்லாத அணிகளில் ஒன்று கிங்ஸ் லெவன் பஞ்சாப். ஆனாலும் பல திறமையான வீரர்களைக் கொண்ட அணியாக இருந்து வந்துள்ளது. சில முறை அரையிறுதி மற்றும் இறுதி போட்டிக்கு சென்றிருந்தாலும் இன்னும் கோப்பையை ருசிக்க முடியவில்லை.
இந்நிலையில் இந்த ஆண்டு நடக்கும் தொடருக்காக தங்கள் அணியின் பெயரை பஞ்சாப் கிங்ஸ் என மாற்றியுள்ளது அணி நிர்வாகம். வீரர்களை மாற்றாமல் பெயரை மாற்றினால் என்ன வெற்றியா பெறப்போகிறீர்கள் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்ய ஆரம்பித்துள்ளனர்.