1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : ஞாயிறு, 5 பிப்ரவரி 2017 (14:24 IST)

டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் மாற்றங்கள்!!

டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களின் கட்டமைப்பை மாற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


 
 
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) கூட்டம் துபாயில் நடந்தது. இந்த கூட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் தொடர்பாக பரிந்துரை செய்யப்பட்டது.
 
ஐசிசி திட்டப்படி, இரு நாடுகள் மோதும், ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களுக்கு பதிலாக மேலும் ஓரிரு, நாடுகளையும் சேர்த்துக்கொண்டு லீக் மாதிரியிலான போட்டிகளை நடத்தலாம் என திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம், வருவாய் அதிகரிக்கும். 
 
டெஸ்ட் விளையாடும் நாடுகளுடன் மேலும் பல குட்டி நாடுகளையும் டெஸ்ட் விளையாடும் நாடுகள் என்ற அந்தஸ்துக்கு தரம் உயர்த்தவும் ஐசிசி திட்டமிட்டுள்ளது. 
 
ஆனால் இதற்கு பிசிசிஐ தரப்பில் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிசிசிஐ முடிவை கேட்டறியாமல் இவ்வாறு ஐசிசி முடிவெடுத்துள்ளதாகவும், இதனால் பிசிசிக்கு இழப்பு ஏற்படும் என்பதும் பிசிசிஐ கருத்து.