ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 29 டிசம்பர் 2021 (10:05 IST)

200 விக்கெட்கள் மைல்கல்லை எட்டிய ஷமி!

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி டெஸ்ட் கிரிக்கெட்டில் 200 விக்கெட்கள் எடுத்து சாதனைப் படைத்துள்ளார்.

நேற்றைய தினம் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்காவை இந்திய அணி 200 ரன்களுக்குள்ளாக சுருட்டியது. இந்த இன்னிங்ஸில் முகமது ஷமி அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம் டெஸ்ட் அரங்கில் 200 விக்கெட்களை வீழ்த்திய 11 ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதுவரை 55 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஷமி 200 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.