இங்கிலாந்து அணியைக் கட்டுப்படுத்த அந்த ஒரு அணியால் மட்டும்தான் முடியும்! முன்னாள் கேப்டன் கணிப்பு!
நடந்துவரும் உலகக்கோப்பை தொடரில் இதுவரை தோல்வியே காணாத அணிகளாக பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் உள்ளன.
உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் இப்போது விறுவிறுப்பாக நடந்துவருகின்றன. இதில் ஏ பிரிவில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி அசுர பலத்துடன் மூன்று போட்டிகளையும் வென்று முதலிடத்தில் உள்ளது. அதே போல பி பிரிவில் பாகிஸ்தான் அணியும் அசுர பலத்துடன் உள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹ்ன் தனது டிவிட்டர் பக்கத்தில் எல்லோருக்கும் இதுதான் செய்தி. இங்கிலாந்து அணிதான் சிறந்த அணி. எதிரணிகளை அடித்து விளாசும் அணியாக இங்கிலாந்து உள்ளது. எங்களின் வெற்றி நடையை யார் தடுப்பது. பாகிஸ்தான் அணியால் மட்டும்தான் அது முடியும் என்று நினைக்கிறேன் எனக் கூறியுள்ளார்.