திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 26 ஜூலை 2022 (08:57 IST)

காமன்வெல்த் போட்டியில் மனரீதியாக துன்புறுத்தல்! – இந்திய வீராங்கனை வேதனை!

Lovlina
லண்டனில் நடைபெற உள்ள காமன்வெல்த் போட்டியில் மனரீதியான துன்புறுத்தல்களை நிர்வாகம் அளிப்பதாக இந்திய வீராங்கனை தெரிவித்துள்ளார்.

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் இந்த ஆண்டு லண்டனில் நடைபெறுகிறது. ஜூலை 28 தொடங்கி ஆகஸ்டு 8 வரை நடைபெற உள்ள இந்த போட்டிகளில் கலந்து கொள்ள இந்தியா உட்பட பல நாடுகளை சேர்ந்த வீரர்களும் லண்டன் சென்றுள்ளனர்.

அவர்கள் காமன்வெல்த் கிராமத்தில் தனிமைப்படுத்தப்பட்டு பயிற்சி பெற்று வருகிறார்கள். இந்நிலையில் காமன்வெல்த் போட்டிகளுக்காக லண்டன் சென்றுள்ள இந்திய குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா தனது ட்விட்டரில், தான் மனரீதியாக அங்கு துன்புறுத்தப்படுவதாக கூறியுள்ளார்.

தனது பயிற்சியாளர் வெளியேற்றப்பட்டுவிட்டதால் 8 நாட்களுக்கு முன்பே பயிற்சி நின்றுவிட்டதாக கூறியுள்ள அவர், கடந்த முறை உலக சாம்பியன்ஷிப்பின்போதும் இதே நிலை ஏற்பட்டதாக கூறியுள்ளார். ஆனால் இந்த தடைகளை தாணி தான் நிச்சயம் வெல்வேன் எனவும் அவர் கூறியுள்ளார்.