1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 1 ஆகஸ்ட் 2017 (00:16 IST)

நீச்சல் குளமாக மாறிய கிரிக்கெட் மைதானம். டி.என்.பி.எல் போட்டி ரத்து

கடந்த சில நாட்களாக டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இன்று லைகா கோவை கிங் அணியும் திண்டுக்கல் டிராகன் அணியும் மோதவிருந்தது 



 
 
ஆனால் போட்டி நடைபெறும் நத்தம் மைதானத்தில் இன்று மதியம் முதல் நல்ல பெய்து வந்ததால் கிரிக்கெட் மைதானமே நீச்சல் குளம் போல் தண்ணீர் இருந்தது. இதனால் இந்த போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் ரத்து செய்யப்பட்டது. எனவே இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
 
இந்த நிலையில் புள்ளிகள் பட்டியலில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி 6 புள்ளிகள் பெற்று முதலிடத்திலும், திருவள்ளூர் வீரன்ஸ்  அணி 4 புள்ளிகள் பெற்று 2வது இடத்திலும், சேப்பாக் சூப்பர் கில்லிஸ் 4 புள்ளுகள் பெற்று 3வது இடத்திலும் உள்ளது.