வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 24 செப்டம்பர் 2021 (07:35 IST)

இரண்டே வெற்றியால் 4வது இடத்திற்கு முன்னேறிய கொல்கத்தா அணி!

இரண்டே வெற்றியால் 4வது இடத்திற்கு முன்னேறிய கொல்கத்தா அணி!
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்த தொடரில் ஆறாவது இடத்தில் இருந்த கொல்கத்தா அணி தொடர்ச்சியாக பெற்ற இரண்டு வெற்றியின் காரணமாக நான்காவது இடத்திற்கு முன்னேறி உள்ளது 
 
முன்னதாக கடந்த 20ஆம் தேதி பெங்களூர் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் கொல்கத்தா அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக புள்ளி பட்டியலில் உயர்ந்ததோடு ரன்ரேட்டும் அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதனை அடுத்து புள்ளிகள் மற்றும் ரன்ரேட் அடிப்படையில் மும்பையை பின்னுக்கு தள்ளிய கொல்கத்தா தற்போது நான்காவது இடத்தில் உள்ளது. மும்பை பரிதாபமாக ஆறாவது இடத்திற்கு தள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது புள்ளி பட்டியலில் டெல்லி, சென்னை, பெங்களூர் மற்றும் கொல்கத்தா ஆகிய அணிகள் முதல் நான்கு இடத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது