புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 11 ஜனவரி 2021 (09:51 IST)

காயம் ஆற 4 முதல் 6 வாரங்கள் ஆகும்… இங்கிலாந்து தொடரிலும் ஜடேஜா இல்லை!

சிட்னி டெஸ்ட்டில் காயமான ரவிந்தர ஜடேஜா இங்கிலாந்துக்கு எதிரான தொடரின் இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய வீரர் ஜடேஜா 4 விக்கெட்களை வீழ்த்தி கலக்கினார். ஆனால் பேட்டிங் செய்யும் போது அவர் கைவிரலில் பட்டு காயமடைந்தார். இதனால் அவர் இரண்டாவது இன்னிங்ஸில் பந்து வீசவில்லை. மேலும் நான்காவது போட்டியில் இருந்தும் விலகியுள்ளார். இது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்துள்ளது.

இந்நிலையில் ஜடேஜாவின் காயம் குறித்து பிசிசிஐ அறிவித்துள்ளது. அதில் ஜடேஜாவின் காயம் ஆற 4 முதல் 6 வாரங்கள் ஆகும் என்பதால் அவர் பிப்ரவரி மாதம் நடக்கும் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் விளையாடமாட்டார் என அறிவித்துள்ளது. இன்றைய போட்டியில் அவர் இறங்குவதற்கான தேவை ஏற்பட்டால் வலி நிவாரணி ஊசி போட்டுக்கொண்டு இறங்குவார் என சொல்லப்படுகிறது.