1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 29 டிசம்பர் 2024 (08:27 IST)

செஸ் போட்டியில் இன்னொரு இந்தியர் சாம்பியன்.. குவியும் வாழ்த்துக்கள்..!

சமீபத்தில் நடந்த உலக சாம்பியன் போட்டியில், சென்னையை சேர்ந்த குகேஷ் சாம்பியன் பட்டம் பெற்று தமிழ்நாட்டிற்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்த்தார். இதனை அடுத்து, இன்னொரு இந்திய சாம்பியன் பட்டம் பெற்றது மகிழ்ச்சியான செய்தியாகும்.

அமெரிக்காவில் நடைபெற்ற உலக மகளிர் ராபிட் செஸ் போட்டியில், இந்தோனேசியா வீராங்கனை ஜரீன் சுகந்தார் என்பவரை வீழ்த்தி, இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி சாம்பியன் பட்டம் பெற்றார். இதனால், அவருக்கு பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

மின்னல் வேகத்தில் காயை நகர்த்த வேண்டிய இந்தப் போட்டியில், கொனேரு ஹம்பி பதினொராவது சுற்றில் இந்தோனேசியா வீராங்கனையை வீழ்த்தி வெற்றி பெற்றார். 37 வயதான கொனேரு ஹம்பி 2009ஆம் ஆண்டில் இதே தொடரில் சாம்பியன் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தைப் பிறப்பு உள்ளிட்ட சில காரணங்களால் தொடர்ச்சியாக செஸ் போட்டிகளில் பங்கேற்க முடியாமல் இருந்த கொனேரு ஹம்பி, தற்போது மீண்டும் களமிறங்கி சாம்பியன் பட்டம் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.



Edited by Siva