1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 15 நவம்பர் 2023 (13:42 IST)

டாஸ் வென்ற இந்தியா அதிரடி முடிவு.. அணியில் என்னென்ன மாற்றங்கள்.

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இறுதி கட்டத்தை வந்துவிட்டது. இன்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே அரையிறுதி போட்டி நடைபெற உள்ள நிலையில் சற்றுமுன் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.

இந்த டாஸை இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா வென்ற நிலையில் அவர்  பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளார்.  இதையடுத்து இந்திய பேட்ஸ்மேன்கள் இன்னும் ஒரு சில நிமிடங்களில் களத்தில் இறங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு அணிகளுமே எந்தவிதமான மாற்றமும் இல்லை என்ற அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய போட்டியில் விளையாடும் இரு அணியின் வீரர்களின் விவரங்கள் பின்வருமாறு

இந்தியா: ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராத் கோஹ்லி, ஸ்ரேயாஸ் அய்யர், கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவிந்திர ஜடேஜா, ஷமி, பும்ரா, குல்தீப் யாதவ், சிராஜ்

நியூசிலாந்து: கான்வே, ரச்சின் ரவீந்த்ரா, வில்லியம்சன், மிட்செல், டாம் லாதம், க்ளென் பிலிப்ஸ், மார்க் சாப்மேன், சாண்ட்னர், டிம் செளதி, பெர்குசன், டிரெண்ட் போல்ட்,


Edited by Mahendran