உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா தங்கம் வென்று சாதனை
ஜூனியர்களுக்கான உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
தென்கொரியாவில் உள்ள சாங்வான் நகரில் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி தற்பொழுது நடைபெற்று வருகிறது.
ஜூனியர் ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர்பிஸ்டல் இறுதிப்போட்டியில் பங்குபெற்ற இந்திய வீரர் சவுரப் சவுத்ரி 245.5 புள்ளிகள் குவித்து தங்கப்பதக்கம் வென்றார். அத்தோடு முந்தைய உலக சாதனையான 243.7 புள்ளிகளை தகர்த்து 245.5 புள்ளிகள் பெற்று புதிய உலக சாதனை படைத்துள்ளார். இவர் உத்திரபிரதேசத்தை சேர்ந்தவர் ஆவார்.
சவுரப் சவுத்ரிக்கு உத்திர பிரதேச மாநில அரசு பாராட்டுக்கள் தெரிவித்துள்ளது. மேலும் நாடெங்கிலிருந்தும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.