பும்ரா, சாஹல் அபார பந்துவீச்சு: தொடரை வென்றது இந்தியா
இன்று திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 3வது மற்றும் இறுதி டி-20 போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதோடு தொடரையும் வென்றது
48 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தால் வெற்றி மற்றும் தொடர் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, இந்திய அணியின் அபார பந்துவீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் 8 ஓவர்களில் 61 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பும்ரா மற்றும் சாஹல் அபாரமாக இரண்டு ஓவர்கள் பந்துவீசி 9 மற்றும் 8 ரன்களே கொடுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் மீண்டும் ஒரு தொடரை இந்திய அணி வென்றுள்ளது