செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: திங்கள், 3 ஜூலை 2017 (04:25 IST)

பாகிஸ்தானை பழிவாங்கிய இந்தியா: 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

சாம்பியன்ஷிப் டிராபி கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி படுதோல்வி அடைந்ததற்கு இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி பழிவாங்கியுள்ளது.



 
 
நேற்று நடந்த மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோதின.
 
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 169 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் ராட் 47 ரன்கள் எடுத்தார்.
 
170 ரன்கள் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கிய விளையாடிய பாகிஸ்தானுக்கு 2வது ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஒரே ரன்னில் தொடக்க ஆட்டக்காரர் ஆயிஷா ஷாபர் அவுட் ஆனார். தொடர்ந்து இந்திய அணி வீராங்கனைகளின் பந்துவிச்சில் அனல் பறந்ததால் பாகிஸ்தான் அணி வெறும் 74 ரன்களில் ஆட்டமிழந்தது. அந்த அணி 4 வீராங்கனைகள் டக் அவுட் ஆனார்கள்.