ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 3 டிசம்பர் 2020 (15:47 IST)

நாளை தொடங்குகிறது டி 20 தொடர்? பழிதீர்க்குமா இந்தியா !

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முதல் டி 20 போட்டி நாளை கான்பெராவில் தொடங்க உள்ளது.

ஆஸ்திரேலிய அணிக்கு முதல் இரண்டு  ஒரு நாள் போட்டிகளிலும் இந்தியா தோற்று தொடரை இழந்தது. கடைசியாக நடந்த மூன்றாவது போட்டியை இந்திய அணி ஆறுதல் வெற்றியாக பெற்றது. இந்நிலையில் நாளை முதல் டி 20 போட்டி நடக்க உள்ளது. இதில் இந்திய அணி வென்று ஒருநாள் தொடரை இழந்ததற்கு பழி தீர்க்கும் முனைப்பில் உள்ளது.

இந்த போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. கடந்த முறை இந்தியா ஆஸ்திரேலியாவில் டி 20 போட்டிகளில் விளையாடிய போது 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றது குறிப்பிடத்தக்கது.