1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : திங்கள், 5 பிப்ரவரி 2024 (06:52 IST)

399 ரன்கள் இங்கிலாந்துக்கு இலக்கு கொடுத்த இந்தியா.. 2வது டெஸ்ட்டில் வெற்றி யாருக்கு?

jaiswal
இந்தியா மாற்றம் இங்கிலாந்து அணிகளுக்கிடையே விசாகப்பட்டினத்தில் இரண்டாவது கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 399 ரன்கள் இலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதல் இன்னிங்ஸில் 396 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 255 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 253 ரன்கள் எடுத்த நிலையில் வெற்றி பெற 399 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் நேற்று ஆட்டநேர முடிவில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 67 ரன்கள் எடுத்துள்ள நிலையில் இன்னும் வெற்றிக்கு 332 ரன்கள் எடுக்க வேண்டும். இன்றும் நாளையும் ஆட்டம் இருக்கும் நிலையில் இங்கிலாந்து அணி வெற்றி பெறுமா அல்லது இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை இந்தியாவில் வீழ்த்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.  
 
இந்தியாவின் முதல் இன்னிங்சில் ஜெய்ஸ்வால் அபாரமாக இரட்டைச் சதம் அடித்தார் என்பதும் அதேபோல் இரண்டாவது இன்னிங்ஸில் சுப்மன் கில் சதம் அடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva