வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 29 ஜூலை 2021 (20:33 IST)

27 ரன்களுக்கு 4 விக்கெட்டுக்கள்: தத்தளித்து வரும் இந்தியா!

27 ரன்களுக்கு 4 விக்கெட்டுக்கள்: தத்தளித்து வரும் இந்தியா!
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்று வரும் மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் சற்று முன் வரை இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 29 ரன்கள் மட்டுமே எடுத்து உள்ளது 
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணியின் கேப்டன் தவான் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார். அதேபோல் சஞ்சு சாம்சன் ரன் ஏதும் எடுக்கவில்லை என்பதும், ருத்ராஜ் கெய்க்வாட் 14 ரன்களும் படிக்கல் 9 ரன்களும் எடுத்து அவுட் ஆகி உள்ளனர் 
 
நான்கு முக்கிய பேட்ஸ்மேன்கள் அவுட் ஆன நிலையில் இந்திய அணி தற்போது 6 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 29 ரன்கள் மட்டுமே எடுத்து தத்தளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இலங்கையில் ஹஸ்ரங்க 2 விக்கெட்டுக்களையும், மெண்டிஸ் மற்றும் சாமிரா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.