திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 29 ஜூலை 2021 (09:59 IST)

பதக்கம் வென்றால்தான் எங்களை இந்தியர்களா மதிப்பீங்களா? – நடிகரின் மனைவி ஆவேசம்!

வட கிழக்கு இந்தியாவை சேர்ந்தவர்கள் என்றால் பதக்கம் வென்றால் மட்டுமே இந்தியர்களாக மதிக்கிறார்கள் என நடிகரின் மனைவி தெரிவித்துள்ளார்.

டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி நடந்து வரும் நிலையில் இந்தியாவுக்காக பளு தூக்கும் போட்டியில் மணிப்பூரை சேர்ந்த மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல நடிகர் மிலிந்த் சோமனின் மனைவி அங்கிதா இதுகுறித்து பதிவிட்டபோது “நீங்கள் வடகிழக்கு இந்தியாவை சேர்ந்தவர் என்றால் பதக்கம் வென்றால் மட்டுமே இந்தியராக முடியும். மற்ற சமயங்களில் சிங்கி, சைனீஸ், நேபாளி என்று அந்நியப்படுத்துவார்கள். இந்தியா சாதி வெறியில் மட்டுமல்ல இனவெறியிலும் மூழ்கியுள்ளது. இதை என்னுடைய சொந்த அனுபவத்திலிருந்து சொல்கிறேன்” என தெரிவித்துள்ளார்.