மண்ணைக் கவ்விய இந்தியா - 80 ரன்னில் நியுசிலாந்து வெற்றி
இந்தியா நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டியில் 220 ரன்கள் இலக்கைத் துரத்தும் இந்திய அணி 139 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்துள்ளது.
இந்தியா நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித்தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட டி20 போட்டிகள் கொண்ட தொடர் இன்று தொடங்கியது.
நியுசிலாந்தின் வெல்லிங்டன் நகரில் தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதையடுத்து பேட்டிங்கை தொடங்கிய நியுசிலாந்து அணியின் பேட்டிங்கில் அனல் பறந்தது. ஓவருக்கு 10 ரன்கள் வீதம் சராசரியாக அடித்து நொறுக்கினர்.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான காலின் மன்ரோ 34 ரன்கள் சேர்த்தார். மற்றொரு தொடக்க வீரரான செய்ஃபர்ட் சிறப்பாக ஆடி அரைசதம் கடந்து 43 பந்துகளில் 84 ரன்கள் அடித்துக் கலக்கினார். கேப்டன் வில்லியம்சனின் 34 ரன்களும், ராஸ் டெய்லரின் 23 ரன்களும் அந்த அணி 219 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரை எட்ட உதவியது.
இதையடுத்து 220 ரன்கள் என்ற கடினமான இலக்கைத் துரத்திய இந்திய அணி ஆரம்பம் முதலே ரன் சேர்க்க முடியாமலும் விக்கெட்களை இழந்தும் தடுமாறி வருகிறது. இந்திய அணியில் ரோஹித் 1 ரன்னிலும், ரிஷப் பாண்ட் 4 ரன்களிலும், தினேஷ் காத்தி 5 ரன்களிலும், ஹர்திக் பாண்ட்யா 4 ரன்களிலும் என ஒற்றை இலக்க எண்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதிகபட்சமாக தோனி 39 ரன்களையும் ஷிகார் தவான் 29 ரன்களையும் விஜய் ஷங்கர் 27 ரன்களையும் சேர்த்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க எண்களிலேயே அவுட் ஆகி வெளியேறினார்.
இதனால் இந்தியா 19.2 ஓவர்களில் இந்தியா அனைத்து விக்கெட்களையும் இழந்து 80 ரன்களில் தோவியடைந்துள்ளது. நியுசிலாந்து தரப்பில் சவுத்தி 3 விக்கெட்களையும் குக்கலின், ஃபெர்குஸன் மற்றும் சோதி ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் மிட்செல் 1 விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினர்.