செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 1 பிப்ரவரி 2021 (16:09 IST)

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் போட்டி; 50% ரசிகர்களுக்கு அனுமதி

சென்னையில் பிப்ரவரி 13 ஆம் தேதி தொடங்கவுள்ள இந்தியா -  இங்கிலாந்து இடையிலான 2 வது டெஸ்ட் போட்டியில் 50% ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியா – இங்கிலாந்து தொடரை காண பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

கொரோனா காரணமாக தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த மாதம் வரை தமிழகத்தில் விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பிப்ரவரி மாதத்திற்கான தளர்வுகளில் விளையாட்டு மைதானங்களில் 50 சதவீதம் பார்வையாளர்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.

தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த தளர்வால் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் தொரை காண பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எனினும் டெஸ்ட் தொடர் அனுமதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

அதில், சென்னை சேப்பாக்கத்தின் நடைபெறவுள்ள இங்கிலாந்து – இங்கிலாந்து இடையேயான2 வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியைக் காண  சுமார் 50% பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிச்சி அடைந்துள்ளனர்.