IND vs SL: முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி!
கொழும்புவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி அபார வெற்றி.
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. இலங்கை அணி இந்தியாவுக்கு 263 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.
கொழும்புவில் முதலாவதாக பேட் செய்த இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் எடுத்தது. இலங்கையின் சமிக்கா கருணா ரத்தன 43 ரன்கள், தாசன் ஷனகா 39 ரன்கள், சரித் அசலங்கா 38 ரன்கள் எடுத்தனர்.
இதனைத்தொடர்ந்து ஆடிய இந்திய அணி பிரிதிவி ஷா, இஷான் கிஷன் அதிரடியிலும் ஷிகர் தவான் நிதானத்திலும் 36.4ஓவர்களில் 263/3 என்று அபார வெற்றி பெற்றது. கொழும்புவில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. பிருத்வி ஷா ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.