திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 19 ஜூலை 2024 (07:12 IST)

மனைவியை விவாகரத்து செய்கிறேன்.. அதிகாரபூர்வமாக அறிவித்த ஹர்திக் பாண்ட்யா..!

இந்திய கிரிக்கெட் அணியின் பிரபல வீரர் ஹர்திக் பாண்ட்யா தனது மனைவியை விவாகரத்து செய்வதாக தனது சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் மற்றும் பந்துவீச்சாளர் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா, நடாஷா என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்த நிலையில் இந்த ஜோடி பிரிய இருப்பதாக கடந்த சில நாட்களாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் மனைவி நடாஷாவை விவாகரத்து செய்ய உள்ளதாக ஹர்திக் பாண்ட்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கடந்த 2000 ஆண்டு பாண்ட்யா மற்றும் நடாஷா திருமணம் செய்த நிலையில் இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. கடந்த ஆண்டு காதலர் தினத்தில் இருவரும் மீண்டும் திருமணம் செய்து கொண்டதாக அறிவித்த நிலையில் அது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வந்தன.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடாஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாண்ட்யா என்ற குடும்பப் பெயரை நீக்கியதால் இருவருக்கும் பிரச்சனை என்று கூறப்பட்ட நிலையில் தற்போது ஹர்திக் பாண்ட்யா அதிகாரப்பூர்வமாக தனது சமூக வலைதளத்தில் நான் மனைவியை விவாகரத்து செய்கிறேன் என்று அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

நான்கு ஆண்டுகள் குடும்ப வாழ்க்கைக்கு பின்னர், நானும் நடாஷாவும் பிரிய முடிவு செய்துள்ளோம். இருவரும் இணைந்திருப்பதற்கான அனைத்து முயற்சிகளை செய்தும், தற்போது பிரிவது தான் இருவருக்குமே  சிறந்த முடிவு என்று முடிவு செய்துள்ளோம். எங்களின் இந்த முடிவு கடினமானதுதான்.

இந்த 4 ஆண்டுகளில் எங்கள் இடையில் இருந்த மகிழ்ச்சி, மரியாதை ஆகியவற்றை கருத்தில் கொண்டு பிரிவு முடிவை எடுத்துள்ளோம். நாங்கள் இருவரும் மகன் அகஸ்தியாவால் ஆசீர்வதிக்கப்பட்ட நிலையில் எங்கள் இருவரின் வாழ்க்கையில் ஒரு முக்கிய அங்கமாக அகஸ்தியா என்றும் இருப்பார். அவருடைய மகிழ்ச்சிக்காக நாங்கள் எல்லாவற்றையும் வழங்க உறுதியாக இருக்கிறோம். இந்த கடினமான நேரத்தில் எங்களின் தனியுரிமையை மதித்து, ஆதரவை அளிக்க வேண்டுகிறோம்."


Edited by Siva