1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 10 மார்ச் 2017 (18:03 IST)

தோனியின் காரை வழிமறித்த பெண்: விமான நிலையத்தில் பரபரப்பு!!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பை துறந்தாலும், டெஸ்ட் போட்டிகளில் இருந்து விடை பெற்றாலும் ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணிக்காக தொடர்ந்து பங்கேற்று வருகிறார் தோனி. 


 
 
சில நாட்களாக கொல்கத்தாவில் நடந்து வரும் உள்ளூர் தொடரான விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடரில் ஜார்கண்ட் அணிக்காக பங்கேற்று விளையாடி வந்தார்.
 
போட்டித்தொடர் முடிந்த பின்னர், கொல்கத்தாவிலிருந்து சொந்த ஊருக்கு விமானத்தில் திரும்பியுள்ளார். விமான நிலயத்தில் இருந்து தனது காரை எடுத்துள்ளார்.
 
அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த பெண் ரசிகை ஒருவர், எப்படியாவது தோனியுடன் செல்பி அல்லது ஆட்டோகிராஃப் வாங்கும் முயற்சியில் அவரின் காரை வழிமறித்துள்ளார். இதனால் அங்கு சற்றும் பரபரப்பு ஏற்பட்டது.
 
இதுகுறித்து அறிந்த விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் ஓடிவந்து அந்த ரசிகையை அப்புறப்படுத்தினர். பின்னர், தோனி ஜன்னல் வழியாக தலையை வெளியே விட்டு பிரச்சனை ஒன்றும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு கிளம்பினார்.