ஐசிசி தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறாரா கங்குலி?
கங்குலியில் பிசிசிஐ தலைவர் பதவி மேலும் மூன்று ஆண்டுகள் நீக்கப்பட்டுள்ள நிலையில் அவர் ஐசிசி தலைவர் பதவிக்கு போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் பதவிக்கு தற்போதைய தலைவரான சௌரவ் கங்குலி போட்டியிட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது
ஐசிசி தலைவராக மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஆதரவு தேவை இல்லை என்றும் 51 சதவீத வாக்குகள் பெற்றாலே போதும் என்றும் புதிய விதி அமல்படுத்தப்பட்டு உள்ளது
இந்த நிலையில் ஏற்கனவே கங்குலி ஐசிசி தலைவர் பதவிக்கு போட்டியிட வேண்டும் என பல உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர் என்பதால் அவர் போட்டியிட்டால் நிச்சயம் வெற்றிபெறுவார் என்று கூறப்படுகிறது
இந்த நிலையில் பிசிசிஐ தலைவராக இருக்கும் கங்குலி, அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஐசிசி தலைவர் பதவிக்கு போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.