கமல் கனவு நனவாகிறதா? விளையாட்டு துறை அமைச்சரான விளையாட்டு வீரர்
ஒரு எஞ்சினியர் பொதுப்பணித்துறை அமைச்சராகவும், ஒரு டாக்டர் சுகாதாரத்துறை அமைச்சராகவும், ஒரு விளையாட்டு வீரர் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் வேண்டும். அப்போதுதான் நாடு முன்னேற்றப்பாதைக்கு செல்லும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் கமல்ஹாசன் தனது பேட்டியில் கூறியிருந்தார்.
அவருடைய கனவு நனவாகிய நிலையில் இந்திய வரலாற்றில் முதன்முறையாக விளையாட்டுத்துறைக்கு விளையாட்டு வீரர் ஒருவர் அமைச்சராகியுள்ளார்.
பாரத பிரதமர் நரேந்திர மோடி நேற்று அமைச்சரவையை மாற்றி அமைத்தபோது துப்பாக்கி சுடும் வீரர் ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர் அவர்களுக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் (தனிபொறுப்பு) பொறுப்பை வழங்கினார். இதற்கு முன்னர் இந்த பதவியில் விஜய் கோயல் இருந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2004ம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடும் போட்டியில் வெள்ளி வென்ற ரத்தோர் ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமைக்குரியவர். அதுமட்டுமின்றி காமன்வெல்த் போட்டியிலும் தங்கம், வெள்ளிப் பதக்கங்களை கைப்பற்றிய இவர் விளையாட்டுத்துறை அமைச்சர் ஆகியிருப்பது அந்த துறையின் வளர்ச்சிக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.