புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: வியாழன், 25 மே 2017 (07:10 IST)

மோர்கன் அபார செஞ்சுரி: இங்கிலாந்து அணிக்கு சூப்பர் வெற்றி

இங்கிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் நேற்று தொடங்கியது. நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பந்துவீச முடிவு செய்ததால் இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது.



 


இந்த போட்டியில் கேப்டன் மோர்கன் மிக அபாரமாக விளையாடி 5 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டர்களுடன் செஞ்சுரி அடித்தார். 50 ஓவர்களில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 339 ரன்கள் குவித்தது.

340 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 45 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 267 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது.